தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் காயம் + "||" + Pakistan attack on Kashmir border injures 3 including women

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் காயம்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் காயம்
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு,

காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று மாலையில் தாக்குதல் நடத்தியது. சிறிய ரக ஆயுதங்களாலும், பீரங்கிகளாலும் நடந்த இந்த தாக்குதல் ஷாபூர், மெந்தர், சவுஜியான் பகுதிகளில் சிலமணி நேரம் நீடித்தது.


இதில் ஷாபூர் பகுதியில் முகமது ஆரிப் (வயது 40), அவரது மனைவி பாத்திமா (35), அவர்களது 2 வார ஆண் குழந்தை ஆகிய 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதனால் இரு பிரிவுக்கும் இடையே நீண்டநேரம் சண்டை நீடித்தது. இதனால் எல்லையோர பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவியது.