அரியானா சிறையில் 19 கைதிகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு


அரியானா சிறையில் 19 கைதிகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு
x
தினத்தந்தி 28 July 2019 8:37 PM GMT (Updated: 28 July 2019 8:37 PM GMT)

அரியானா சிறையில் 19 கைதிகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அம்பாலா,

அரியானா மாநிலம் அம்பாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகளுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 19 கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தற்போது சண்டிகரில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து சிறைக்கு புதிதாக வரும் கைதிகளுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை நடத்திய பிறகே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதாக சிறை அதிகாரி லக்பிகர் சிங் பரார் கூறினார். மேலும் எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வு முகாம்களும் சிறைக்குள் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Next Story