வெளிநாட்டில் ஓட்டலில் பொருட்கள் திருட்டு: இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மத்திய மந்திரி அறிவுரை


வெளிநாட்டில் ஓட்டலில் பொருட்கள் திருட்டு: இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மத்திய மந்திரி அறிவுரை
x
தினத்தந்தி 29 July 2019 8:45 PM GMT (Updated: 29 July 2019 8:33 PM GMT)

வெளிநாட்டில் ஓட்டலில் பொருட்கள் திருடப்பட்டது தொடர்பாக, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மத்திய மந்திரி அறிவுரை வழங்கி உள்ளார்.

புதுடெல்லி,

வெளிநாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்த சில பொருட்களை இந்திய சுற்றுலா பயணிகள் திருடி சிக்கிக்கொண்டனர். இந்த வீடியோ காட்சி நேற்று இந்தியாவில் வேகமாக பரவியது. இதுபற்றி சுற்றுலாத் துறை மந்திரி பிரஹலாத் சிங் பட்டேலிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-

அந்த வீடியோவை நான் பார்க்காததால் அதுபற்றி குறிப்பிட்டு கூற முடியாது. இந்தியாவாக இருந்தாலும், வெளிநாடாக இருந்தாலும் பொது இடங்களில் நாம் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நாட்டின் மீதும், நமது மக்கள் மீதும் ஒரு மரியாதைக்குரிய மதிப்பை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு இந்தியர்களான நமக்கு உள்ளது. இதுபோன்ற செயல்கள் ஒட்டுமொத்த நாட்டின் மீதும் ஒரு அவமதிப்பை ஏற்படுத்திவிடும். அதேபோல இந்தியாவுக்கு வெளிநாட்டினர் வரும்போதும் அவர்கள் முன்பு நாம் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story