தேசிய செய்திகள்

“நமக்கு அமைந்ததைப் போன்ற அண்டை நாடு வேறு யாருக்கும் அமைந்து விடக் கூடாது”-ராஜ்நாத் சிங் விமர்சனம் + "||" + Hope no one gets a neighbour like ours: Rajnath Singh jabs Pakistan

“நமக்கு அமைந்ததைப் போன்ற அண்டை நாடு வேறு யாருக்கும் அமைந்து விடக் கூடாது”-ராஜ்நாத் சிங் விமர்சனம்

“நமக்கு அமைந்ததைப் போன்ற அண்டை நாடு வேறு யாருக்கும் அமைந்து விடக் கூடாது”-ராஜ்நாத் சிங் விமர்சனம்
நமக்கு அமைந்ததைப் போன்ற அண்டை நாடு வேறு யாருக்கும் அமைந்து விடக் கூடாது என இறைவனை வேண்டிக் கொள்வதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக ரீதியிலான தொடர்புகளை  முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

இது குறித்துப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “தனது அண்டை நாட்டை மாற்றிக்கொள்ளும் சலுகை எந்த ஒரு நாட்டுக்கும் கிடையாது” என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியதை நினைவு கூர்ந்தார். மேலும், “ நமது அண்டை நாடு தான் நமக்கு இருக்கும் மிகப் பெரிய கவலை. நண்பர்களை நாம் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அருகில் வசிப்பவர்களை நாம் மாற்றிக் கொள்ள முடியாது. நமக்கு அமைந்ததை போன்ற அண்டை நாடு வேறு யாருக்கும் அமைந்து விடக் கூடாது என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.