பாலியல் தொல்லையை தடுத்த குடும்பத்தினர் மீது ஆசிட் வீச்சு, 16 பேர் பாதிப்பு


பாலியல் தொல்லையை தடுத்த குடும்பத்தினர் மீது ஆசிட் வீச்சு, 16 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 28 Aug 2019 11:01 AM GMT (Updated: 28 Aug 2019 11:01 AM GMT)

பீகாரில் பாலியல் தொல்லையை தடுத்த குடும்பத்தினர் மீது ஆசிட் வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைசாலி மாவட்டம் தவுத்நகரில் இளம் பெண் ஒருவருக்கு இளைஞர் கும்பல் ஒன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. இதனை இளம்பெண்ணின் குடும்பத்தார் தடுத்துள்ளனர். இதனால் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த மற்றொரு கும்பல் ஆசிட்டை வீசி அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளது. ஆசிட் வீச்சில் 16 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 8 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணையை மேற்கொண்டுவரும் போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.

Next Story