நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று போராட்டம்


நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று போராட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2019 3:11 AM GMT (Updated: 31 Aug 2019 3:11 AM GMT)

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிரப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்த உள்ளனர்.

சென்னை,

10 பொதுத்துறை வங்கிகளின் இணைப்பை நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி 4 பெரிய வங்கிகளுடன், 6 சிறிய வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இதன்மூலம் 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகள் ஆகின்றன.

 பொது துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.  வங்கி ஊழியர்கள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து போராட்டத்தில் ஈடுபடுவர். சென்னை பிராட்வேயில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா முன் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story