மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை


மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை
x
தினத்தந்தி 31 Aug 2019 1:38 PM GMT (Updated: 31 Aug 2019 1:38 PM GMT)

மறைந்த முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

பாட்னா,

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய அரசில் நிதித்துறை மந்திரியாகவும் இருந்தவர், அருண் ஜெட்லி (வயது 66).  உடல்நலக் குறைவின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண் ஜெட்லி  சிகிச்சைப் பலனின்றி கடந்த 24-ம் தேதி உயிரிழந்தார்.  பின்னர் அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். 

மேலும் அருண் ஜெட்லியின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் எனக்கூறியுள்ளார்.

இது குறித்து நிதிஷ்குமார் கூறுகையில்,  அருண் ஜெட்லி ஒரு திறமையான மனிதர். அவர் அரசாங்கத்தின் அமைச்சக பொறுப்புகளை திறமையாகவும், சாதுர்யமாகவும் கையாண்டவர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story