இந்திய விமான படையின் மிக் 21 ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது


இந்திய விமான படையின் மிக் 21 ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது
x
தினத்தந்தி 25 Sep 2019 7:37 AM GMT (Updated: 25 Sep 2019 7:37 AM GMT)

மத்திய பிரதேசத்தில் இந்திய விமான படையின் மிக் 21 ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது.

குவாலியர்,

மத்திய பிரதேசத்தில் குவாலியர் நகரில் இந்திய விமான படையை சேர்ந்த மிக் 21 ரக பயிற்சி விமானம் ஒன்றில் விமானிகள் இன்று பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது.  இந்த விபத்தில் கேப்டன் மற்றும் மற்றொரு அதிகாரி என அதில் பயணித்த இரண்டு பேரும் பாதுகாப்புடன் விமானத்தில் இருந்து தப்பி வெளியேறி விட்டனர்.  விமானம் விபத்தில் சிக்கியது எப்படி என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story