பாரத ரத்னா விருதுக்கு இணையாக புதிய விருதை அறிமுகம் செய்தது மத்திய அரசு


பாரத ரத்னா விருதுக்கு இணையாக புதிய விருதை அறிமுகம் செய்தது மத்திய அரசு
x
தினத்தந்தி 25 Sep 2019 9:28 AM GMT (Updated: 25 Sep 2019 9:28 AM GMT)

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு இணையாக புதிய விருதை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

புதுடெல்லி,

தேசிய ஒற்றுமைக்காக பாடுபடுவோரை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை விருது வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி அறிவித்தார். நாட்டின் முதல் உள்துறை  மந்திரியான சர்தார் வல்லபாய் படேல் சிறுசிறு பகுதிகளாக இருந்த சுமார் 500 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தார். அவரது நினைவாக இந்த விருது அறிவிக்கப்படும் என  மத்திய அரசு கூறியது.

இந்நிலையில் "சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது" என்ற புதிய விருதை மத்திய அரசு அறிமுகம் செய்தது. நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு இணையாக இந்த விருது கருதப்படும் எனவும்,  நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒருங்கிணைப்புக்காகவும் சிறந்த பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Next Story