'சில வங்கிகளை மூட உள்ளதாக வெளியாகும் தகவல் தவறு’ -நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார்


சில வங்கிகளை மூட உள்ளதாக வெளியாகும் தகவல் தவறு’ -நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார்
x
தினத்தந்தி 25 Sep 2019 10:53 AM GMT (Updated: 25 Sep 2019 10:53 AM GMT)

சில வங்கிகளை ஆர்பிஐ மூட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை என்று நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி அதிகாரிகள் சங்கம்  வருகின்ற 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வங்கி  அதிகாரிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் அறிவித்ததை அடுத்து, வங்கி அதிகாரிகளின் வேலை நிறுத்தம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் வழக்கம்  போல வங்கிச் சேவைகள் கிடைக்கும் என்று வங்கி அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இந்தநிலையில்,  சில வங்கிகளை ஆர்பிஐ மூட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து நிதித் துறை செயலாளர் ராஜீவ் குமார் கூறியதாவது:-

சில வங்கிகளை ஆர்பிஐ மூட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை. பொதுத்துறை வங்கிகள் மூடப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்தவே சில சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story