ஐ.நா.வில் மகாத்மா காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்: தமிழில் பதிவிட்ட பிரகாஷ் ஜவடேகர்


ஐ.நா.வில் மகாத்மா காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்: தமிழில் பதிவிட்ட பிரகாஷ் ஜவடேகர்
x
தினத்தந்தி 25 Sep 2019 12:08 PM GMT (Updated: 25 Sep 2019 12:08 PM GMT)

ஐ.நா. சபை சார்பில் 150 மரக்கன்றுகளை நட்டு, சிறப்பு தபால்தலை வெளியிட்டு மகாத்மாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தமது டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி, 

ஐ.நா. தலைமையகத்தில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி 195 உறுப்புநாடுகளின் எண்ணிக்கையைக் குறிக்கும் வகையில், சூரியசக்தி தகடுகள் பரிசாக வழங்கப்பட்டது. 

மேலும், ஐ.நா. சபை சார்பில் 150 மரக்கன்றுகளை நட்டு, சிறப்பு தபால்தலை வெளியிட்டு மகாத்மாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மகாத்மா காந்தியின். 150-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வரலாற்று நிகழ்வில், இந்தியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, ஜமைக்கா, பங்களாதேஷ் நாட்டு பிரதமர்களும், கொரிய அதிபரும் பங்கேற்று  மகாத்மாவுக்கு புகழஞ்சலி செலுத்தினர். 

வளத்தையும், முன்னேற்றத்தையும், சமுதாய மேம்பாட்டையும் உறுதி செய்வதோடு, காந்தியின் அமைதி, அகிம்சை கொள்கைகளைப் பின்பற்றுமாறு இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் உலக நாடுகளுக்கு  வேண்டுகோள் விடுத்த தகவலை மத்திய மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தமது டுவிட்டர் பதிவில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

Next Story