புகழேந்தி 24ம் புலிகேசியாய் உருவாகி இருக்கிறார்- டிடிவி தினகரன் கிண்டல்


புகழேந்தி 24ம் புலிகேசியாய் உருவாகி இருக்கிறார்- டிடிவி தினகரன் கிண்டல்
x
தினத்தந்தி 25 Oct 2019 10:22 AM GMT (Updated: 25 Oct 2019 10:22 AM GMT)

புகழேந்தி 24-ம் புலிகேசியாய் உருவாகி இருக்கிறார் என டிடிவி தினகரன் கிண்டல் செய்து உள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்தார். பின்னர்  அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர்,  முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  புகழேந்தி சந்தித்தது குறித்து கூறும்போது,  கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும்.  புகழேந்தி 24-ம் புலிகேசியாய் உருவாகி இருக்கிறார். அவர் அதிமுகவில் இருக்கிறாரா? அமமுகவில் இருக்கிறாரா? என கூற வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது,  "சிறையிலிருந்து சசிகலா விரைவில் வெளியே வருவார். அதற்கான சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

Next Story