ராமர் கோவில் கட்டும் பணி டிசம்பர் 6-ந்தேதி தொடங்கும் பா.ஜனதா எம்.பி. சாக்‌ஷி மகராஜ் சொல்கிறார்


ராமர் கோவில் கட்டும் பணி டிசம்பர் 6-ந்தேதி தொடங்கும் பா.ஜனதா எம்.பி. சாக்‌ஷி மகராஜ் சொல்கிறார்
x
தினத்தந்தி 26 Oct 2019 11:27 PM GMT (Updated: 26 Oct 2019 11:27 PM GMT)

ராமர் கோவில் கட்டும் பணி டிசம்பர் 6-ந்தேதி தொடங்கும் என்று பா.ஜனதா எம்.பி. சாக்‌ஷி மகராஜ் கூறினார்.

உன்னோ,

உத்தரபிரதேச மாநிலம் உன்னோ தொகுதி பா.ஜனதா எம்.பி.யும், கட்சியின் மூத்த தலைவருமான சாக்‌ஷி மகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் வாதங்கள் சுப்ரீம் கோர்ட்டில் நிறைவுபெற்றுள்ளது. அரசியல்சாசன அமர்வு தனது தீர்ப்பை நவம்பர் 17-ந்தேதிக்குள் அறிவிக்க உள்ளது. அயோத்தி ராமஜென்ம பூமி என்பதற்கான இந்திய தொல்லியல் ஆய்வு துறையின் வலிமையான ஆதாரங்கள் உள்ளன.

ஷியா வக்பு வாரியம்கூட ராமர் கோவிலுக்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளது. எனவே ராமர் கோவில் கட்டுவதில் எந்த இடையூறும் உள்ளதா என்ற கேள்விக்கே இடமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். பல முஸ்லிம் அமைப்புகளும் ராமர் கோவில் கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை என்று இப்போது தெரிவித்துள்ளன.

எனவே சுப்ரீம் கோர்ட்டில் நவம்பர் 17-ந்தேதிக்குள் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அயோத்தியில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டிடம் 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6-ந்தேதி பிரமாண்ட ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story