மத்திய அரசு நடவடிக்கையால் மியான்மரில் சிறைபிடிக்கப்பட்ட 5 இந்தியர்கள் விடுதலை


மத்திய அரசு நடவடிக்கையால் மியான்மரில் சிறைபிடிக்கப்பட்ட 5 இந்தியர்கள் விடுதலை
x
தினத்தந்தி 6 Nov 2019 2:07 AM IST (Updated: 6 Nov 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு நடவடிக்கையால் மியான்மரில் சிறைபிடிக்கப்பட்ட 5 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

மியான்மர் நாட்டில் அரக்கன் ஆர்மி என்ற பெயரில் ஆயுதமேந்திய போராளிகள் குழு ஒன்று இயங்கி வருகிறது.

இந்த குழு, அங்கு ராகைன் மாகாணத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 6 இந்தியர்களையும், அந்த நாட்டின் எம்.பி. உள்ளிட்ட உள்நாட்டினர் 5 பேரையும் பணயக்கைதிகளாக சிறை பிடித்தது.

இது குறித்து தகவல் கிடைத்த உடனேயே மத்திய அரசு அவர்களை விடுவிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது.

அதன்பேரில் சிறை பிடிக்கப்பட்ட 6 இந்தியர்களில் 5 பேர் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர். எஞ்சிய ஒருவர் காவலில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.

விடுவிக்கப்பட்ட 5 இந்தியர்களும் இந்தியாவுக்கு திரும்புகின்றனர்.

இதை மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Next Story