காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு; 4 பேர் பலி


காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு; 4 பேர் பலி
x
தினத்தந்தி 7 Nov 2019 9:19 PM IST (Updated: 7 Nov 2019 9:19 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. பனிப்பொழிவு தொடர்பான நிகழ்வுகளில் 4 பேர் பலியாகினர்.

ஸ்ரீநகர், 

காஷ்மீர் மாநிலத்தில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் இறந்துள்ளனர். குப்வாரா மாவட்டத்தில் ராணுவ நிலை அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ போர்ட்டர்களான மன்சூர் அகமது, இஷாக் கான் ஆகியோர் சிக்கி இறந்தனர்.

ஸ்ரீநகர் மாவட்டத்தில் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட மின்சார கோளாறை ஊழியர் சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் மின் கம்பத்தில் இருந்து விழுந்து இறந்து போனார். ஸ்ரீநகர் ஹாபாக் பகுதியில் பனியால் எடை அதிகரித்து ஒரு மரக்கிளை முறிந்து விழுந்ததில் நடந்து சென்ற ஒருவர் இறந்தார். இதில் ஒரு காரும், ஆட்டோவும் நொறுங்கியது.

Next Story