தேசிய செய்திகள்

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது; கூடுதல் பாதுகாப்பு படையினர் வெளியேறத் தொடங்கினர் + "||" + additional forces sent to kashmir in aug start to leave

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது; கூடுதல் பாதுகாப்பு படையினர் வெளியேறத் தொடங்கினர்

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது; கூடுதல் பாதுகாப்பு படையினர் வெளியேறத் தொடங்கினர்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டும் யூனியன் பிரதேசங்களாக முறைப்படி செயல்படத் துவங்கியது. தற்போது, துணை நிலை ஆளுநர்கள் நிர்வாகத்தின் கீழ் இரண்டு யூனியன் பிரதேசங்களும் உள்ளன. 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன்பு ,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  துணை ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். இணையதள முடக்கம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், அங்கு பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்த நிலையில்,  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு சுமார் 5 மாதங்கள்  ஆகியுள்ள நிலையில் காஷ்மீரில் வேகமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இதையடுத்து, கூடுதலாக அனுப்பப்பட்ட வீரர்கள்  திரும்ப  அழைக்கப்பட்டுள்ளனர். தற்போது, சுமார் 4 ஆயிரம் வீரர்கள் காஷ்மீரை விட்டு வெளியேறி தங்கள் முகாமிற்கு திரும்பினர். வரும் நாட்களில், கூடுதலாக அனுப்பப்பட்ட வீரர்கள் முழுவதுமாக திரும்பபெறப்படுவார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் மீண்டும் 2ஜி இணைய சேவை தொடங்கியது
காஷ்மீரில் மாநிலத்தில் 2ஜி இணைய சேவை மீண்டும் தொடங்கியது.
2. சுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஆழ்துளை கிணறு அமைப்பதால் பரபரப்பு
சுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஆழ்துளை கிணறு அமைப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
3. காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் அவந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. காஷ்மீரில் பனிப்பொழிவால் பாதிப்பு
காஷ்மீரில் நிலவி வரும் பனிப்பொழிவால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. 8 வழிச்சாலை திட்ட வழக்கு: மத்திய அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு
8 வழிச்சாலை திட்ட வழக்கு தொடர்பாக, மத்திய அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவினை பிறப்பித்தது.