92 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் - மத்திய அரசு தகவல்


92 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 4 Dec 2019 8:00 PM GMT (Updated: 4 Dec 2019 7:54 PM GMT)

92 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காக, ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க கடந்த 3-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில், விருப்ப ஓய்வுக்கு 92 ஆயிரம் பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஊழியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

இரு நிறுவனங்களையும் மத்திய அரசு இணைக்கும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளிக்க முடியும். இந்த நிறுவனங்களுக்கு 4ஜி சேவை அளிக்கப்படும். இரண்டையும் லாபகரமாக இயக்க உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story