3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதைக்கு ‘வாஜ்பாய்’ பெயர்

3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதைக்கு ‘வாஜ்பாய்’ பெயர் சூட்டப்பட்டது.
புதுடெல்லி,
இமாசலபிரதேச மாநிலத்தின் மணாலியையும், லடாக்கின் லே-வையும் இணைக்கும் வகையில், ரோதங் பாசுக்கு அடியில் வாகன சுரங்கப்பாதை அமைக்க வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது முடிவு செய்யப்பட்டது. தற்போது, இந்த வாகன சுரங்கப்பாதை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதற்கு வாஜ்பாயின் பெயர் சூட்டும் நிகழ்ச்சி, டெல்லியில் நேற்று நடந்தது.
அதில் பங்கேற்ற பிரதமர் மோடி, “ரோதங் சுரங்கப்பாதையானது இனிமேல் ‘அடல் சுரங்கப்பாதை’ என்று அழைக்கப்படும்” என்று அறிவித்தார். இந்த திட்டம், பிராந்தியத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடும் என்றும், சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் கூறினார். இப்பாதை, 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 8¾ கி.மீ. நீளம் கொண்டது. உலகிலேயே நீளமான வாகன சுரங்கப்பாதை இதுவே ஆகும். இந்த பாதையால், மணாலி-லே இடையிலான தூரம் 46 கி.மீ. குறையும் என்று ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இமாசலபிரதேசம் மற்றும் லடாக்கின் எல்லைப்புற ஒதுக்குப்புறங்கள், குளிர்காலத்தின்போது, மற்ற பகுதிகளில் இருந்து 6 மாதத்துக்கு துண்டிக்கப்பட்டு இருக்கும். இந்த பாதை திறக்கப்பட்டதும், எல்லா பருவகாலங்களிலும் இடையூறின்றி செல்ல முடியும்.

Related Tags :
Next Story