இந்திய முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் இல்லை; தேசிய குடியுரிமை பதிவுக்கு ஷியா வக்பு வாரிய தலைவர் ஆதரவு


இந்திய முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் இல்லை; தேசிய குடியுரிமை பதிவுக்கு ஷியா வக்பு வாரிய தலைவர் ஆதரவு
x
தினத்தந்தி 26 Dec 2019 12:28 PM GMT (Updated: 26 Dec 2019 12:28 PM GMT)

இந்திய முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என தேசிய குடியுரிமை பதிவுக்கு ஷியா வக்பு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

லக்னோ,

என்ஆர்சி  எனப்படும் தேசிய குடியுரிமை  பதிவை அமல்படுத்தும் விவகாரம் தொடர்பாக நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் உத்தர பிரதேச ஷியா வக்பு வாரிய தலைவர் வசீம் ரிஸ்வி என்ஆர்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வசீம் ரிஸ்வி கூறுகையில், இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை என்பதால் தேசிய குடியுரிமை பதிவை தேசிய அளவில் விரிவுப்படுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக விளங்கும் சமாஜ்வாதி, மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முஸ்லிம் வாக்குவங்கியை கவர, தேசிய குடியுரிமை பதிவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருவதாகவும், காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் வாக்குவங்கியே ஊடுருவல்காரர்கள் தான் என்றும் வசீம் ரிஸ்வி குறிப்பிட்டார்.

Next Story