தேசிய செய்திகள்

மராட்டியத்தில் புதிதாக பதவியேற்ற காங்.மந்திரிகள் சோனியா, ராகுலுடன் சந்திப்பு + "||" + Congress Maha ministers meet Sonia, Rahul Gandhi

மராட்டியத்தில் புதிதாக பதவியேற்ற காங்.மந்திரிகள் சோனியா, ராகுலுடன் சந்திப்பு

மராட்டியத்தில் புதிதாக பதவியேற்ற காங்.மந்திரிகள் சோனியா, ராகுலுடன் சந்திப்பு
மராட்டியத்தில் புதிதாக பதவியேற்ற காங்கிரஸ் மந்திரிகள் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுடெல்லி,

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன.  சிவசேனா கட்சியின் தலைவர்  உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவருடன் 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரி பதவி ஏற்றனர். 

இந்த நிலையில் 31 நாட்களுக்கு பிறகு நேற்று மந்திரிசபை விரிவாக்கம் நடந்தது. விதான் பவன் வளாகத்தில் நடந்த இந்த விழாவில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இவர் உள்பட 36 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். 

இவர்களில் 10 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். புதிதாக மந்திரியாக பதவியேற்றுக்கொண்ட இந்த  10 பேரும் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் அடிமை மன நிலையை காட்டுகிறது ; சிவசேனா பாய்ச்சல்
டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் இந்தியர்களின் அடிமை மன நிலையை காட்டுவதாக சிவசேனா விமர்சித்துள்ளது.
2. தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க முடியாது ; மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
அனைத்து மதத்தினரையும் பாதிக்கும் என்பதால், தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க முடியாது என்று மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.
3. மே 1-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மராட்டிய அரசு முடிவு
மராட்டியத்தில், ஒருமுறை பயன்படுத்தி விட்டு வீசும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மே 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்படும் என மந்திரி ஆதித்ய தாக்கரே அறிவித்து உள்ளார்.
4. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்
மராட்டியத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் 350 அடி உயரதிற்கு அம்பேத்கர் சிலை தயாராக உள்ளதாக அம்மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
5. பால் தாக்ரே நினைவிடத்திற்காக மரங்கள் வெட்டப்படாது : மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்ரே
பால்தாக்ரே நினைவிடத்திற்காக மரங்கள் வெட்டப்படாது என்று மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.