தேசிய செய்திகள்

ஜம்மு- காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு + "||" + Centre sanctions Rs 80,000 crore development package for Jammu and Kashmir

ஜம்மு- காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு

ஜம்மு- காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு
ஜம்மு-காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ரூ80 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதனால் மாநில மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டதால் ஊரடங்கு, தகவல் தொடர்பு துண்டிப்பு, இணையதள வசதி நிறுத்தம் என பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.


பின்னர் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, இணைய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் 2ஜி இணையசேவைகள் காஷ்மீர் முழுவதும் மீண்டும் கொண்டுவரப்பட்டது.  

இந்நிலையில் மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.80 ஆயிரம் கோடி ரூபாய் நிதியினை ஜம்மு-காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ஒதுக்கி உள்ளது. இந்த தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 7 மாதங்களுக்கு பின்னர் காஷ்மீரில் இன்று பள்ளிகள் திறப்பு
7 மாதங்களுக்கு பின்னர் காஷ்மீரில் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
2. 5 மாதமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் 4 பேர் விடுவிப்பு
5 மாதமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் 4 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
3. ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய உள்ள மத்திய அமைச்சரவை குழு
மத்திய அமைச்சரவை குழு, அடுத்த வாரம் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
4. கடும் குளிரால் காஷ்மீரில் தால் ஏரி உறைந்தது
கடும் குளிர் காரணமாக காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி உறைந்தது.
5. கடும் பனிப்பொழிவு எதிரொலி; பிற பகுதிகளில் இருந்து, காஷ்மீர் 3-வது நாளாக துண்டிப்பு
காஷ்மீர் முழுவதும் சாலைகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.