தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பொய்யர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது - அமித்ஷா குற்றச்சாட்டு + "||" + Arvind Kejriwal government tops the list of liars - Amit Shah

அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பொய்யர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது - அமித்ஷா குற்றச்சாட்டு

அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பொய்யர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது - அமித்ஷா குற்றச்சாட்டு
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பொய்யர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பதாக அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,

டெல்லி சட்டபேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசு தினமான இன்று டெல்லி கொண்டா தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  

இதையடுத்து அமித்ஷா பேசிய போது, “டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பொய்யர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாடு முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ஒரு அரசாங்கம் நீர் தூய்மையில் முதலிடத்திலும், மற்றொரு அரசாங்கம் சாலை கட்டுமானத்திலும், வேறு சில மின்மயமாக்கலிலும் முதலிடத்திலும் உள்ளன. 

ஆனால் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பொய்யர்களின் பட்டியலில் முதலிடம் பெறுவதைத் தவிர வேறு எதிலும் முதன்மை பெறவில்லை” என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மோடியும் அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் இல்லை ; சிவசேனா
‘மோடியும், அமித்‌ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல’ என சிவசேனா தெரிவித்து உள்ளது.
2. அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பாரா?
டெல்லி முதல் மந்திரியாக 3-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் நாளை பதவியேற்கிறார்.
3. 3-வது முறையாக முதல்-மந்திரி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால், 16-ந் தேதி பதவி ஏற்பு
அரவிந்த் கெஜ்ரிவால், 3-வது முறையாக டெல்லி முதல்-மந்திரியாக 16-ந் தேதி பதவி ஏற்கிறார்.
4. டெல்லி காவல்துறையை அமித்ஷா தவறாக பயன்படுத்துகிறார் ; கெஜ்ரிவால் பாய்ச்சல்
டெல்லி காவல்துறையை அமித்ஷா தவறாக பயன்படுத்துகிறார் என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
5. குடியுரிமை திருத்த சட்டம் பற்றி ராகுல், மம்தா பொதுவெளியில் விவாதிக்க தயாரா? - அமித்ஷா கேள்வி
குடியுரிமை திருத்த சட்டம் பற்றி பொதுவெளியில் விவாதிக்க தயாரா? என ராகுல், மம்தா, மாயாவதி உள்ளிட்டோருக்கு அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.