கொரோனா வைரஸ் பாதிப்பு : உதவி எண்ணை அறிவித்தது மத்திய அரசு


கொரோனா வைரஸ் பாதிப்பு : உதவி எண்ணை அறிவித்தது   மத்திய அரசு
x
தினத்தந்தி 28 Jan 2020 6:17 AM GMT (Updated: 28 Jan 2020 6:17 AM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க உதவி எண்னை மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி: 

கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 106 பேர்  பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி திங்கள்கிழமை முடிவில், சீனாவின் வுகானில் கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,515 ஆக இருந்தது. வுகான் நகருக்கு மக்கள் செல்லவும், அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, நேபாளம் வரை இந்த வைரஸ் பரவியுள்ளது. 

வுகானில் இன்னும் 250 இந்திய மாணவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.  வுகானில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேரில் 4 பேருக்கு பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை  தடுப்பது மற்றும் எதிர்கொள்வது குறித்து இந்திய கேபினட் செயலர் ராஜிவ் கவுபா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், குறிப்பாக சீனாவில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்துவது எனவும், நேபாள எல்லையில் செக் போஸ்ட்களை அமைப்பது எனவும் முடிவு  செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ்  குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) 24X7 ஹெல்ப்லைனை  அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் ஹெல்ப்லைன் எண்: + 91-11-23978046

இந்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்டவர்களின் கவலைகளுக்கு பதிலளிக்க சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்கனவே மூன்று ஹாட்லைன்களைத் திறந்துள்ளது. கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் தொடர்ந்து பதிலளித்து வருகிறது.


Next Story