கும்பமேளாவை அமைதியாக நடத்திய உ.பி. அரசு ஊழியர்களுக்கு 1 மாத சம்பளம் போனஸ்


கும்பமேளாவை அமைதியாக நடத்திய உ.பி. அரசு ஊழியர்களுக்கு 1 மாத சம்பளம் போனஸ்
x
தினத்தந்தி 28 Jan 2020 6:24 PM GMT (Updated: 28 Jan 2020 6:24 PM GMT)

கும்பமேளாவை அமைதியாக நடத்திய உ.பி. அரசு ஊழியர்களுக்கு 1 மாத சம்பளம் போனஸாக வழங்க முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

லக்னோ, 

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த 2 மாதங்களாக கும்பமேளா கோலாகலமாக நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட 24 கோடி பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். அதில் 10 லட்சம் பேர் வெளிநாட்டவர் ஆவர். இருப்பினும் ஒரு அசம்பாவித செயல் கூட நிகழவில்லை.

எனவே இந்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் வகையில், கும்பமேளாவின் போது சிறப்பாக பணியாற்றிய மாநில ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்க முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத்  உத்தரவிட்டார்.

அதன்படி, ஏறத்தாழ 1½ லட்ச மாநில அரசு ஊழியர்கள் இந்த போனஸ் தொகையை பெறுகிறார்கள். அவர்களில் 43 ஆயிரம் பேர் போலீசார் ஆவர். ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை போனஸ் கிடைக்கும்.

இந்த விழாவின் போது ஒரே நேரத்தில் 10 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிந்து புதிய சாதனை படைத்து உள்ளனர். கும்பமேளா விழாவிற்காக உ.பி. அரசு சுமார் 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவிட்டு இருக்கிறது.

Next Story