தேசிய செய்திகள்

உலகிலேயே மோசமான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம் பெங்களூரு + "||" + Bengaluru Has World's Worst Traffic, 4 Indian Cities In Top 10: Report

உலகிலேயே மோசமான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம் பெங்களூரு

உலகிலேயே மோசமான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம் பெங்களூரு
உலகிலேயே மோசமான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம் என்ற பெயரை பெங்களூரு நகரம் பெற்றுள்ளது.
புதுடெல்லி

டாம் டாம் டிராபிக் இன்டக்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் உலகிலேயே மோசமான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம் பெங்களூரு என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 57 நாடுகளில் 416 நகரங்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் முடிவுகளின் படி தென்னிந்திய நகரங்களில் உள்ள வாகன ஓட்டுநர்கள் பயண நேரத்தில் சராசரியாக 71 சதவீதம் கூடுதல் நேரம் செலவழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு (71 சதவீதம்), மும்பை (65 சதவீதம்), புனே (59 சதவீதம்), புதுடெல்லி (56 சதவீதம்) முறையே 1, 4, 5 மற்றும் 8-வது இடத்தில் உள்ளன.

குறிப்பாக பெங்களூரில் உள்ள வாகன ஓட்டிகள் ஆண்டுக்கு 243 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பெங்களூருவைப் போலவே மும்பை, புனே மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களும் இந்திய அளவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களாக அறியப்பட்டுள்ளன. 

இந்த ஆண்டு 56 சதவீத  நெரிசலில் சிக்கி நேரத்தை செலவிடுகின்றனர். இதில் புதுடெல்லி  8-வது இடத்தைப் பிடித்துள்ளது. சராசரியாக, டெல்லிவாசிகள் நெரிசலில் 190 மணி நேரங்களை செலவிடுகின்றனர், அதாவது ஒவ்வொரு ஆண்டும் 7 நாட்கள், 22 மணிநேர போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றனர்.

முதல் 10 இடங்களில் இடம்பெறும் மற்ற உலகளாவிய நகரங்கள்   பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மணிலா, கொலம்பியாவிலிருந்து பொகோட்டா, ரஷ்யாவிலிருந்து மாஸ்கோ, பெருவைச் சேர்ந்த லிமா, துருக்கியிலிருந்து இஸ்தான்புல், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜகார்த்தா ஆகியவை அடங்கும்.

தொடர்புடைய செய்திகள்

1. போக்குவரத்து நெரிசலை குறைக்க ஈரோடு மேம்பாலம் திறக்கப்பட்டது
ஈரோட்டில் நேற்று முன்தினம் முதல் ஊரடங்கு விதிமுறைகள் பெருமளவு தளர்த்தப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டது.
2. தனது இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கு வேறு தந்தை அதிர்ச்சியில் நபர்; ஒரு கோடியில் ஒன்றில் நடக்க வாய்ப்பு
புதிதாகப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு இரண்டு வெவ்வேறு தந்தைகள்; ஒரு கோடியில் ஒன்றில் இவ்வாறு நடக்க வாய்ப்பு உள்ளது ஆய்வாளர் கூறி உள்ளார்.
3. சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
திருப்பத்தூரில் வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களில் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
4. நிமிடத்திற்கு ஒருமுறை அலெக்ஸாவிடம் ஐ லவ் யூ கூறும் இந்தியர்கள்
நிமிடத்திற்கு ஒருமுறை அலெக்ஸாவிடம் இந்தியர்கள் ஐ லவ் யூ கூறி வருகிறார்கள்.
5. 3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியின் குரல் கண்டுபிடிப்பு; ஆய்வாளர்கள் சாதனை
3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மியின் குரல் எப்படி இருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.