டி.எம்.கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டுக்கு அனுமதி மறுத்துள்ளது வெட்கக்கேடானது - ப.சிதம்பரம்


டி.எம்.கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டுக்கு அனுமதி மறுத்துள்ளது வெட்கக்கேடானது - ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 30 Jan 2020 5:33 PM GMT (Updated: 30 Jan 2020 5:33 PM GMT)

டி.எம்.கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டு விழா நடத்துவதற்கு கலாஷேத்ரா நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது வெட்கக்கேடானது என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

டி.எம்.கிருஷ்ணா புத்தக வெளியீட்டு விழா நடத்துவதற்கு இடம் தர கலாஷேத்ரா அனுமதி தர மறுத்து விட்டது. புத்தக வெளியீடு நடத்த ஏற்கெனவே கொடுத்த அனுமதியை ரத்து செய்வதாக கலாஷேத்ரா நிர்வாகம் கடிதம் அனுப்பியது.

இது குறித்து தனியார் டிவிக்கு  டி.எம்.கிருஷ்ணா அளித்த பேட்டியில், 

தென்னிந்தியாவில் மிருதங்கம் செய்பவர்களின் வாழ்க்கையை பற்றிய புத்தகம் எழுதியுள்ளேன். பட்டியல் இன மக்கள் தான் 7 தலைமுறைகளாக மிருதங்கம் செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். எந்த தோலை பயன்படுத்தினால் எப்படி தாளம் வரும் என்பதை அறிந்து மிருதங்கத்தை செய்கிறார்கள். மிருதங்கம் தயாரிப்பு தொழிலாளர்களின் சிரமத்தை புத்தகத்தில் கூறியுள்ளேன். பிப்ரவரி 2இல் திட்டமிட்டபடி புத்தக வெளியீட்டு விழா வேறு இடத்தில் நடைபெறும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், டி.எம்.கிருஷ்ணாவின் புத்தக வெளியீட்டு விழா நடத்துவதற்கு கலாஷேத்ரா நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது வெட்கக்கேடானது என்று மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அனுமதியை திரும்பப் பெறுவது என்பது மறைமுகமாக ஒப்பந்தத்தை ரத்து செய்வது என்பது தான். இது சட்டவிரோதமானது. இதன் பின்னணியில் ஏதோ அழுத்தம் உள்ளது. கலாஷேத்ரா நிர்வாகத்தை கைப்பற்றுவதற்கு எதிராக நிற்க வேண்டிய நேரம் இது. இந்த எதிர்ப்பினை காட்ட புத்தக மற்றும் இசைப் பிரியர்கள் அதிக அளவில் ஏசியன் ஊடகவியல் கல்லூரியில் திரள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Next Story