இந்தியர்களை மீட்பதற்கு ஒத்துழைப்பு அளித்த சீன அரசிற்கு நன்றி - இந்திய வெளியுறவுத்துறை


இந்தியர்களை மீட்பதற்கு ஒத்துழைப்பு அளித்த சீன அரசிற்கு நன்றி - இந்திய வெளியுறவுத்துறை
x
தினத்தந்தி 31 Jan 2020 3:20 PM GMT (Updated: 31 Jan 2020 3:20 PM GMT)

இந்தியர்களை மீட்பதற்கு ஒத்துழைப்பு அளித்த சீன அரசிற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி உள்ளது. 

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, சீனாவின் வுஹான் பகுதியில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் சீனா புறப்பட்டு சென்றது. முதல் விமானம் அதிகாலை 2 மணிக்குள் இந்தியா திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. 2-வது விமானம் நாளை இந்தியாவில் இருந்து சீனா புறப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யியை தொடர்பு கொண்ட இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உகான் பகுதியில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க ஒத்துழைப்பு கொடுத்த சீன அரசிற்கு நன்றி தெரிவிப்பதாகவும், கொரோனா வைரஸை எதிர்க்கொண்டு போராடி வரும் சீனாவிற்கு இந்திய அரசு எப்போதும் தொடர்பில் இருக்கும் என்று தெரிவித்தார்.

Next Story