தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் கொரோனாவில் இருந்து மீண்ட இத்தாலி முதியவர் சாவு + "||" + Italian Citizen Who 'Recovered' from Coronavirus Dies in Jaipur

ராஜஸ்தானில் கொரோனாவில் இருந்து மீண்ட இத்தாலி முதியவர் சாவு

ராஜஸ்தானில் கொரோனாவில் இருந்து மீண்ட இத்தாலி முதியவர் சாவு
ராஜஸ்தானில் கொரோனாவில் இருந்து மீண்ட இத்தாலி முதியவர் உயிரிழந்தார்.
ஜெய்ப்பூர்,

இத்தாலியில் இருந்து ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த 69 முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருந்தார். இதனால் அவர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்றார். இதில் அவருக்கு கொரோனா தொற்று குணமடைந்தது.


இதயம் மற்றும் நுரையீரல் நோயாளியான இவர், அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல விரும்பினார். இதனால் அவர் நேற்று முன்தினம் காலையில் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றுக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று அதிகாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஜெய்ப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்றதில் அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வெளியில் செல்லும் தகுதியுடன் இருந்ததாக கல்லூரி முதல்வர் சுதிர் பண்டாரி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் இன்று 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் இன்று 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஹாலிவுட் நடிகர் கொரோனாவுக்கு பலி
ஹாலிவுட் நடிகரான டிரினி லோபஸ் கொரோனாவுக்கு பலியானார்.
3. கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் - உற்சாகத்துடன் இருப்பதாக ஆஸ்பத்திரி அறிக்கை
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 13 நாட்களுக்கு பின்னர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்தார். அவர் உற்சாகத்துடன் இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
4. ஒருநாளில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா - இந்தியாவில் தொற்று பாதிப்பு சற்று குறைவு
இந்தியாவில் ஒரு நாளில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
5. ராஜஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி: ஒரு மாத பரபரப்பு முடிவுக்கு வந்தது
ராஜஸ்தான் சட்டசபையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றது.