கேரளாவில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 27 April 2020 3:12 PM GMT (Updated: 27 April 2020 3:12 PM GMT)

கேரளாவில் இன்று புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளத்தில் புதிதாக 13 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது; கேரளத்தில் புதிதாக 13 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 123 ஆக உள்ளது. கேரளத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 481 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களுள் ஒரு மருத்துவர் உட்பட மூன்று பேர் மருத்துவ ஊழியர்கள். கொரோனா பாதிப்பில் இருந்து 342 பேர் குணமடைந்துள்ளனர்.  20 ஆயிரம் பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்” என்றார். 

Next Story