தாராவியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு


தாராவியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 28 April 2020 3:11 PM GMT (Updated: 28 April 2020 3:11 PM GMT)

தாராவியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றாகவும் மும்பையின் இதய பகுதியாகவும்  அமைந்து உள்ள தாராவியில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. தாராவியில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

பொது கழிவறைகள் மற்றும் குடிசைப்பகுதிகள் கிருமிநாசினியால் சுத்தம் செய்யும் பணிநடந்து வருகிறது. இந்தநிலையில் தாராவியில் நேற்று புதிதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்டது. இதன் மூலம் தாராவியில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது. தாராவி பகுதியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. 

Next Story