தாராவியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 344 ஆக உயர்வு


தாராவியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 344 ஆக உயர்வு
x
தினத்தந்தி 29 April 2020 3:49 PM GMT (Updated: 29 April 2020 3:49 PM GMT)

மும்பை தாராவி குடிசைப்பகுதியில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இங்கு ஆட்கொல்லி கொரோனா மிரட்டி வருகிறது. கடந்த 1-ந் தேதி துணிக்கடைக்காரர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதை அடுத்து தாராவியில் நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. 

தாராவியில் இன்று ஒருநாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், தாராவியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. தாராவியில், இதுவரை 70 ஆயிரம் பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டு இருப்பதாக மராட்டிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் 9318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Next Story