நோயாளிகள் போல் வேடமிட்டு ஆம்புலன்சில் ஊருக்கு வந்த புதுமண தம்பதி; தடுத்து தனிமைப்படுத்திய போலீசார்


நோயாளிகள் போல் வேடமிட்டு ஆம்புலன்சில் ஊருக்கு வந்த புதுமண தம்பதி; தடுத்து தனிமைப்படுத்திய போலீசார்
x
தினத்தந்தி 30 April 2020 7:44 AM GMT (Updated: 30 April 2020 7:44 AM GMT)

நோயாளிகள் போல் வேடமிட்டு ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு வந்த புதுமண தம்பதியை தடுத்து போலீசார் தனிமைப்படுத்தினர்.

முசாபர்நகர்,

இந்தியாவில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர பணியாற்றி வருகிறது.  இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் காசியாபாத் நகரில் இருந்து முசாபர்நகர் நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று வேகமுடன் சென்று கொண்டிருந்தது.  இதில் சந்தேகமடைந்த போலீசார் வாகன சோதனையின்பொழுது தடுத்து நிறுத்தி அதனை சோதனையிட்டு உள்ளனர்.

அந்த ஆம்புலன்சில் நோயாளிகள் போன்று உடை அணிந்து இருந்த ஆண் மற்றும் பெண்ணிடம் விசாரித்ததில் அவர்கள் புதுமண தம்பதி என்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து ஆம்புலன்சில் இருந்த தம்பதியின் உறவினர்கள் 7 பேர் உள்பட 9 பேரும் கட்டாளி பகுதியில் உள்ள அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.  நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புதுமண தம்பதியை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story