இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33,610 ஆக உயர்வு


இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33,610 ஆக உயர்வு
x
தினத்தந்தி 30 April 2020 1:18 PM GMT (Updated: 30 April 2020 1:18 PM GMT)

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33,610 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், நம் வாழ்க்கை முறையை தலைகீழாக மாற்றி உள்ளது. உணவு, உடை, உறைவிடம் இவை நாட்டுக்கு நாடு மாறுபட்டு இருந்த நிலையில், இந்த கொரோனா அனைவரையும் ஒரேபோல வாழ பழக்கிவிட்டது. விதவிதமான உணவுகளை உண்டு வந்தவர்களை இன்று நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஆகாரத்தை தேட வைத்துவிட்டது. 

விலையுயர்ந்த வண்ணமயமான ஆடைகளை அணிந்து உலா வந்தவர்களைகூட முகத்தில் முக கவசம் அணிந்து கொண்டு, உடல் முழுவதையும் மறைக்கும் உடையை அணியச் செய்துவிட்டது. உல்லாச பறவைகளாக சுற்றித்திரிந்தவர்களை உறைவிடமான வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அடங்கி இருக்க வைத்துவிட்டது.

பூமியில் வாழும் அனைவரும் இந்த கொரோனா எப்போது ஒழியும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்திலேயே இந்த வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 31 லட்சத்துக்கும் மேற்பட்டோரை நோய்த்தொற்றுக்கு உள்ளாக்கியதுடன், 2 லட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரையும் காவு வாங்கிவிட்டது.  இந்தியாவிலும் சுமார் 33 ஆயிரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று  மாலை வெளியிட்ட புள்ளி விவரத்தில், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33,610- ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1,075 ஆக அதிகரித்து இருக்கிறது.  கொரோனா பாதிப்பில் இருந்து  குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8373 ஆக உயர்ந்துள்ளது.

Next Story