மே 23-ந் தேதி வரை நேரடி வரி வசூல் ரூ.91,646 கோடி


மே 23-ந் தேதி வரை நேரடி வரி வசூல் ரூ.91,646 கோடி
x
தினத்தந்தி 26 May 2020 6:45 PM GMT (Updated: 26 May 2020 6:15 PM GMT)

மே 23-ந் தேதி வரை நேரடி வரி வசூல் ரூ.91,646 கோடியாக உள்ளது.

மும்பை, 

நடப்பு 2020-21-ஆம் நிதி ஆண்டில், மே 23-ந் தேதி வரை மத்திய அரசின் நேரடி வரி வசூல் ரூ.91,646 கோடியாக இருக்கிறது.

நேரடி வரிகளில் நிறுவன வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி, பங்கு பரிவர்த்தனை வரி போன்றவை அடங்கும். இந்த வரிகள் யார் மீது விதிக்கப்படுகிறதோ அவர்தான் செலுத்த வேண்டும். மறைமுக வரிகள் (ஜி.எஸ்.டி) போல் மற்றவர்கள் மீது சுமத்த முடியாது.

நடப்பு 2020-21-ஆம் நிதி ஆண்டில் மே 23-ந் தேதி வரையிலான காலத்தில் நேரடி வரி வசூல் ரூ.91,646 கோடியாக உள்ளது.

கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.1.05 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, வரி வசூல் 13 சதவீதம் குறைந்துள்ளது.

Next Story