தேசிய செய்திகள்

மராட்டியத்தில் அதிகரித்து வரும் கொரோனா: இன்று புதிதாக 5257 பேருக்கு தொற்று உறுதி + "||" + Maharashtra reports 181 deaths and 5257 new COVID19 positive cases today. Out of 181 deaths, 78 occurred in the last 48 hours and 103 from the previous period.

மராட்டியத்தில் அதிகரித்து வரும் கொரோனா: இன்று புதிதாக 5257 பேருக்கு தொற்று உறுதி

மராட்டியத்தில் அதிகரித்து வரும் கொரோனா: இன்று புதிதாக 5257 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 5257 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை எட்டியே உயர்ந்து வருகிறது.

மராட்டிய மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று 5 ஆயிரத்து 493 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 3-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதேபோல மராட்டியத்தில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 429 ஆகி உள்ளது.

இந்நிலையில் இன்று ஒரேநாளில் 5257 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 1 லட்சத்து 69ஆயிரத்து 883 பேரை கொரோனா தாக்கி உள்ளது. மேலும்  73298 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மராட்டியத்தில் கடந்த 48 மணிநேரத்தில் 181பலியாகி உள்ளனர்.இதன்மூலம் பலியானவர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 610 ஆகி உள்ளது.

இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கதுய்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 13,348 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்
மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 13,348 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
2. ஆந்திராவில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 10,820 பேருக்கு தொற்று உறுதி
ஆந்திராவில் இன்று மேலும் 10,820 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
4. இந்தியாவில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 49 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில், கொரோனா பாதித்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 48 ஆயிரத்து 900 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
5. கேரள விமான விபத்து:மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை - அமைச்சர் கே.கே. சைலஜா
கேரள விமான விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா தெரிவித்துள்ளார்.