தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் இன்று ஒரேநாளில் 1105 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Karnataka reported 1,105 COVID-19 cases and 19 deaths today, taking total number of cases to 14,295 and deaths to 226. Number of active cases stands at 6,382: State Health Department

கர்நாடகத்தில் இன்று ஒரேநாளில் 1105 பேருக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் இன்று ஒரேநாளில் 1105 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் இன்று ஒரேநாளில் 1105 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதலில் குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையும், வைரஸ் தொற்றால் பலியாவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடகத்தில் இன்று ஒரேநாளில் 1105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 14,295 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 19பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 176 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்னிக்கை 7,683 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,382 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் நாளை முதல் மீண்டும் மழை பெய்யும் - இயற்கை பேரிடர் மைய முன்னாள் இயக்குனர் தகவல்
கர்நாடகத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் மழை பெய்யும் என்று இயற்கை பேரிடர் மைய முன்னாள் இயக்குனர் கூறியுள்ளார்.
2. கர்நாடகத்தில் 37 பயணிகள் ரெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றம் - தென்மேற்கு ரெயில்வே தகவல்
கர்நாடகத்தில் 37 பயணிகள் ரெயில் எக்ஸ்பிரசாக மாற்றப்பட்டு உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.
3. கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 13,550 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 8,500 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
4. கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 9,289 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்
கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 9,289 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
5. கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 10,990 பேர் மரணம் - துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தகவல்
கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 10,990 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்று துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறியுளளார்.