கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது -பிரதமர் மோடி
கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி,
கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவின் குளோபல் வீக் என்ற நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: இயற்கையை இறைவனாக வழிபடுவதுதான் இந்தியாவின் மரபு. எந்த எந்த சோதனையாக இருந்தாலும் அதில் இருந்து இந்தியா மீண்டும் வரும் என்பதுதான் வரலாறு. பேரிடர் காலத்தில் மக்களுக்கு தேவையான சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் மற்ற நாடுகளுக்கு வழங்கப்படும். ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு நிதி நேரடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும் உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும்.

இந்திய மருத்துவதுறை ஒட்டுமொத்த உலகத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. வேலைவாய்ப்பு திட்டத்தால் நகர்புற பொருளாதாரம் மேம்படும்” என்றார்.
Related Tags :
Next Story