இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி வழக்கு: பதில் அளிக்க பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யக்கோரி வழக்கு: பதில் அளிக்க பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 July 2020 8:15 PM GMT (Updated: 27 July 2020 7:29 PM GMT)

இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கில், பதில் அளிக்க பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி, 

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்ற பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிராகவும், தேர்வுகளை ரத்து செய்யக்கோரியும் சில மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான காணொலி அமர்வு விசாரித்தது. அப்போது பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில் ஆஜரான வக்கீல், ’நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் 209 பல்கலைக்கழகங்கள் தங்களது தேர்வுகளை நடத்தி முடித்துள்ளன. 394 பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு தேர்வை நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் 35 பல்கலைக்கழகங்கள் மட்டும் இன்னும் இறுதித்தேர்வை நடத்தாமல் உள்ளனர். மேலும் இணையவழி தேர்வு, உரிய சமூக இடைவெளியுடன் தேர்வுகளை நடத்துவது போன்ற பல்வேறு வழிமுறைகளை வைத்திருக்கிறோம்’ என்று வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு நாளைக்குள் (புதன்கிழமை) பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 31-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story