சிசிடிவி கேமராக்களை உலக அளவில் அதிகம் நகரங்களில் ஐதராபாத்தும் ஒன்று

சிசிடிவி கேமராக்களை உலக அளவில் அதிகம் பயன்படுத்தும் முதல் 20 நகரங்களில் 16- வது இடத்தில் ஐதராபாத் நகரம் இருப்பதாக இங்கிலாந்து நிறுவன ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்
இங்கிலாந்தின் கம்பாரிடெக் எனும் நிறுவனம் இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையை தெலுங்கானா மாநில காவல்துறை தலைவர் மகேந்தர் ரெட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் உலக அளவில் 16-வது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் ஐதராபாத் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் முழுவதும் 3 லட்சம் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்புக்கு பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் சீனாவின் தையுவான் நகரம் நான்கு லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட (4,65,255) சிசிடிவி கேமராக்களுடன் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story