தேசிய செய்திகள்

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது சட்டவிரோதம்-சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு + "||" + Sanjay Raut Speaks Again on Having CBI Probe in Sushant Singh Rajput Case, Says ‘Sit Quietly Till Mumbai Police Finish Investigation’

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது சட்டவிரோதம்-சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது சட்டவிரோதம்-சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது சட்டவிரோதமானது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
மும்பை, 

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி 50-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். இந்தநிலையில் திடீர் திருப்பமாக பீகாரில் வசித்து வரும் சுஷாந்த் சிங்கின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசும் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை மும்பையில் தான் நடைபெற்றது. ஆனால் இந்த வழக்கில் பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், அதை பீகார் அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்தது. அதை உடனடியாக மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. இந்த வழக்கு தற்போது தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் சி.பி.ஐ. வசம் தான் உள்ளது.

நாங்கள் சி.பி.ஐ.க்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மும்பை போலீசார் ஏற்கனவே தங்கள் பணியை செய்து வருகின்றனர். இதில் சி.பி.ஐ. என்ன செய்ய போகிறார்கள்? சுஷாந்தின் குடும்பத்தினர் உட்பட அனைவரும் சற்று அமைதிகாக்க வேண்டும். சுஷாந்துக்கு நீதி கிடைக்க மும்பை போலீசாரை விசாரணையை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. வழிபாட்டு தலங்கள் திறப்பு எப்போது? சஞ்சய் ராவத் பதில்
வழிபாட்டு தலங்களை திறப்பது எப்போது என்பதற்கு சஞ்சய் ராவத் பதில் அளித்து உள்ளார்.
2. ‘சஞ்சய் ராவத் அரசியல் வாழ்க்கை முடிந்து போகும்’ - சஞ்சய் நிருபம் தாக்கு
சஞ்சய் ராவத் அரசியல் வாழ்க்கை முடிந்து போகும் என்று மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபம் கூறினார்.
3. மும்பையை அவமதித்த ‘கங்கனாவிற்கு பா.ஜனதா ஆதரவு அளிப்பது துரதிருஷ்டவசமானது’ சஞ்சய் ராவத் வேதனை
மும்பையை அவமதித்த ‘கங்கனாவிற்கு பாரதீய ஜனதா ஆதரவு அளிப்பது துரதிருஷ்டவசமானது’ என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
4. சிவசேனாவின் தலைமை செய்தி தொடர்பாளராக சஞ்சய் ராவத் நியமனம்
சிவசேனாவின் தலைமை செய்தி தொடர்பாளராக சஞ்சய் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
5. மும்பையை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகை கங்கனா ரணாவத் மன்னிப்பு கேட்க வேண்டும் சஞ்சய் ராவத் வலியுறுத்தல்
மும்பையை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகை கங்கனா ரணாவத் மன்னிப்பு கேட்க வேண்டும் என சஞ்சய் ராவத் வலியுறுத்தி உள்ளார்.