கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய மந்திரி ஸ்ரீபாத நாயக் குணம் அடைந்து வருகிறார் - கோவா சுகாதார அதிகாரி தகவல்


கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய மந்திரி ஸ்ரீபாத நாயக் குணம் அடைந்து வருகிறார் - கோவா சுகாதார அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 29 Aug 2020 10:45 PM GMT (Updated: 29 Aug 2020 10:30 PM GMT)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்திய மந்திரி ஸ்ரீபாத நாயக் குணம் அடைந்து வருவதாக கோவா சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

பனாஜி,

மத்திய ஆயுஷ் இலாகா மந்திரி ஸ்ரீபாத நாயக்குக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் கோவா மாநிலம் பனாஜி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டு கடந்த 12-ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் நடத்தப்பட்டு கொரோனா பரிசோதனையிலும் அவருக்கு இன்னும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஸ்ரீபாத நாயக் குணம் அடைந்து வருவதாகவும், முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாகவும், சுவாசமும் சீராக இருப்பதாகவும் கோவா மாநில சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். ஒட்டுமொத்தத்தில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், இன்னும் 2 நாட்கள் கழித்து அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

இந்த வார தொடக்கத்தில் டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மற்றும் ராணுவ ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவினர் கோவா வந்து, ஸ்ரீபாத நாயக்கின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து, அவரை சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லலாமா? என்பது பற்றி பரிசீலித்தனர். ஆனால் அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சை திருப்பி அளிக்கும் வகையில் இருந்ததால், அவரை டெல்லி கொண்டு செல்ல அவசியல் இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

Next Story