மராட்டிய மாநிலத்தில் இன்று 5,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டிய மாநிலத்தில் இன்று 5,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 20 Nov 2020 3:10 PM GMT (Updated: 20 Nov 2020 3:10 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் இன்று 5,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று புதிதாக 5,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,68,695 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 155 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 46,511 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 16,42,916 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 78,272 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story