இடம் மாறுகிறது பாராளுமன்ற மகாத்மா காந்தி சிலை


இடம் மாறுகிறது பாராளுமன்ற மகாத்மா காந்தி சிலை
x
தினத்தந்தி 22 Nov 2020 11:34 PM GMT (Updated: 22 Nov 2020 11:34 PM GMT)

தற்போது புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கான வேலைகள் துவங்கி நடைபெற்று வருகின்றது.


புதுடெல்லி,

பாராளுமன்றம் எப்போது ஆர்ப்பாட்டம் அல்லது தர்ணா நடந்தால், எம்.பி.,க்களின் பின், மகாத்மா காந்தி, அமைதியாக சிலை வடிவில் அமர்ந்திருப்பார். 'டிவி' க்களில் இதை பார்த்திருக்கலாம். தற்போது புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கான வேலைகள் துவங்கி நடைபெற்று வருகின்றது. புதிய பாராளுமன்ற முன், காந்தி சிலை நிறுவ வேண்டும். எனவே, தற்போதுள்ள காந்தி சிலையை பெயர்த்தெடுத்து, புதிய இடத்தில் வைக்க வேண்டும்.  பாரளுமன்ற வளாகத்தில் உள்ள மற்ற சிலைகளும் இடம் மாற வேண்டும். புதிய கட்டிடம் கட்டும் வரை, வேறொரு இடத்தில், இந்த சிலைகள் வைக்கப்படும். எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல், மிகவும் கவனமாக, காந்தி உட்பட மற்ற சிலைகளையும் வேறு இடத்திற்கு மாற்றும்படி உத்தரவிட்டுள்ளாராம், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா.

Next Story