மும்பை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் முன்பதிவு நாளை தொடக்கம்


மும்பை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் முன்பதிவு நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 1 Dec 2020 3:46 AM IST (Updated: 1 Dec 2020 3:46 AM IST)
t-max-icont-min-icon

மும்பை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

மும்பை, 

மும்பை- நாகர்கோவில் இடையே வருகிற 7-ந் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் ரெயில்(வண்டி எண்: 06430) வரும் 7-ந்தேதி முதல் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரெயில் காலை 6 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 7.15 மணிக்கு மும்பை சி.எஸ்.எம்.டி. வந்தடையும்.

மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரெயில் 8-ந் தேதி முதல் செவ்வாய், புதன், வியாழன், சனி ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் இரவு 8.35 மணிக்கு சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்பட்டு 3-வது நாள் காலை 10.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

இதில் சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரெயிலுக்கான (06339) முன்பதிவு நாளை (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது.

Next Story