காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்


காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்
x
தினத்தந்தி 3 Dec 2020 2:32 AM IST (Updated: 3 Dec 2020 2:32 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

ஜம்மு, 

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்திய வீரர்கள் பலர் வீரமரணம் அடைந்ததோடு, பல அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகிறார்கள். இந்த தாக்குதலுக்கு இந்திய தரப்பில் அவ்வப்போது பதிலடி கொடுக்கப்படுகிறது.

இதற்கிடையே கதுவா மாவட்டம் ஹிரா நகர் செக்டாரில் சர்வதேச எல்லை கோட்டு பகுதியில் உள்ள கரோல் கிருஷ்ணா, பன்சார், குர்னாம் பகுதிகளில் விடிய, விடிய பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. நேற்று முன்தினம் இரவு 9.50 மணிக்கு தொடங்கிய இந்த தாக்குதல் நேற்று அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தது. இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்தியா தரப்பில் சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

Next Story