கர்நாடகாவில் இன்று 1,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக மாநிலத்தில் இன்று 1,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, கர்நாடகாவில் இன்று 1,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,89,113 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் இன்று 13 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,821 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 8,52,584 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 24,689 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story