உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்
x
தினத்தந்தி 24 Dec 2020 4:21 AM GMT (Updated: 24 Dec 2020 4:21 AM GMT)

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சென்ற விமானம் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது.

கொல்கத்தா,

கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் செல்ல இருந்த விமானத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் விமானம் கிளம்பி சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

இதன் காரணமாக அந்த விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் புறப்படும்போதே தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் உடனடியாக விமானத்தை தரையிறக்க முடிந்தது.

இதுகுறித்து கொல்கத்தா விமான நிலைய இயக்குநர் கூறுகையில், “கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த விமானம் புறப்பட்ட உடனே தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இத்தகைய அவசர நிலை உருவானது. இந்த விமானத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இருந்தார். இன்று அவர் ஹைதராபத் செல்லவுள்ளார்” என்று தெரிவித்தார்.

Next Story