டெல்லியில் இன்று 386 பேருக்கு கொரோனா பாதிப்பு


டெல்லியில் இன்று 386 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2021 11:09 AM GMT (Updated: 12 Jan 2021 11:09 AM GMT)

டெல்லியில் இன்று 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,30,892 ஆக அதிகரித்துள்ளது. 

டெல்லியில் இன்று 16 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து அங்கு இதுவரை, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,707 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 545 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

டெல்லி முழுவதும் இதுவரை 6,17,006 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது அங்கு மொத்தம் 3,179 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story