இந்தியாவில் இன்று புதிதாக 15,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மத்திய சுகாதாரத்துறை தகவல் + "||" + 15,968 new cases of corona infection confirmed in India today - Union Health Department
இந்தியாவில் இன்று புதிதாக 15,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மத்திய சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் புதிதாக 15,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,95,147 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 202 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,51,529 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 17,817 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,01,29,111 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 2,14,507 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 18 கோடியே 34 லட்சத்து 89 ஆயிரத்து 114 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 8,36,227 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.