நாளை 72-வது குடியரசு தினம்: குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு இன்று மாலை உரை + "||" + President Ram Nath Kovind to address nation on eve of 72nd Republic Day
நாளை 72-வது குடியரசு தினம்: குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு இன்று மாலை உரை
நாளை 72-வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு இன்று மாலை உரையாற்றுகிறார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் நாளை 72-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு இன்று மாலை உரையாற்றுகிறார்.
இதன்படி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மாலை 7 மணிக்கு நிகழ்த்தும் உரை, அகில இந்திய வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசைகளில் ஒலிபரப்பப்படுவதுடன், அனைத்து தூர்தர்ஷன் சேனல்களில் இந்தியிலும் அதைத்தொடர்ந்து ஆங்கிலத்திலும் ஒளிபரப்பப்படும். இந்தி மற்றும் ஆங்கில உரையைத் தொடர்ந்து தூர்தர்ஷனின் பிராந்திய சேனல்களில் மாநில மொழிகளிலும் குடியரசுத் தலைவரின் உரை ஒளிபரப்பாகும்.
அகில இந்திய வானொலியில் இரவு 9:30 மணி முதல் சம்பந்தப்பட்ட மண்டல அலைவரிசைகளில் குறிப்பிட்ட மாநில மொழிகளில் ஒலிபரப்பாகும்.